K U M U D A M   N E W S

கே.பி.முனுசாமி திடீர் சாலை மறியல்; கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய சாலை பணிகளை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவின் கே.பி.முனுசாமி சாலை மறியலில் ஈடுபட்டார்.

மருத்துவ மாணவி படுகொலை; மருத்துவர்கள் தொடர் போராட்டம்!

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

LIVE : MLA Vanathi Srinivasan Press Meet : பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பு

BJP MLA Vanathi Srinivasan Press Meet : கோவை மாநகராட்சி பள்ளியில் விருட்சம் திட்டத்தின் கீழ், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் மரக்கன்று நடுவிழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார்.

மகாவிஷ்ணு விவகாரம்; போலீசார் அதிரடி திட்டம்!

மகாவிஷ்ணு 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்

அடங்காத இலங்கை கடற்படை; நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்!

நடுக்கடலில் இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்தது.

'மகாவிஷ்ணு கைது தவறு’ - வெளிப்படையாக பேசிய எல்.முருகன்!

மகா விஷ்ணுவை கைது செய்தது தவறு என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

விசிக மதுவிலக்கு மாநாடு: 'எந்த அரசியலும் இல்லை’.. அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி!

விசிக மதுவிலக்கு மாநாடு நடத்துவதில் எந்த அரசியலும் இல்லை என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் Ford?

அமெரிக்காவில் உள்ள முதல்வர் ஸ்டாலின் Ford நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தினார்.

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம்.. 7,000 போலீசார் குவிப்பு!

தியாகி இம்மானுவேல் சேகரனின் 67வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது

அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல் நேரடி விவாதம்: அனல்பறக்க பேசிய டிரம்ப்.. சுடச்சுட பதிலடி கொடுத்த கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப்- கமலா ஹாரிஸ் இடையே முதல் நேரடி விவாதம் நடந்தது.

கடலூரில் மாயமான 4 மாணவிகள்.. 4 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீஸ்!

கடலூரில் மாயமான 4 மாணவிகளை போலீசார் 4 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர்.

மதுவிலக்கு மாநாடு: திமுகவை எதிர்க்கிறாரா திருமாவளவன்?.. அமைச்சர் முத்துசாமி பதில்!

திருமாவளவன் தனது கருத்தை தெரிவிப்பதற்காக மட்டுமே மதுவிலக்கு மாநாடு நடத்துகிறார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

வாய் பேச்சால் வந்த வினை.. மகாவிஷ்ணுவுக்கு இன்று மிக முக்கிய நாள்!

மகா விஷ்ணுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

தமிழ்நாட்டிற்கு எந்த முதலீடும் வராது.. எல்.முருகன் பாய்ச்சல்!

தமிழ்நாட்டிற்கு எந்த முதலீடும் வரப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

குமுதம்-கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி

குமுதம் வார இதழ், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய வாகை சூடவா நிகழ்ச்சி கோவையில் நடந்தது.

வெள்ளையன் மரணம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி.. அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்படுமா?

வெள்ளையன் மறைவிற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். வெள்ளையன் உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மது ஒழிப்பை யார் நினைத்தாலும் செய்ய முடியாது.. ஆனால்.. திமுக அமைச்சர் புது விளக்கம்

மது ஒழிப்பை எந்த கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் முடியாது என்றும் இதனை சமூகத்தில் மாற்றத்தின் மூலமாகத்தான் கொண்டு வரவேண்டும் என்று திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தி கொள்ளவும் – சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மையால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் குமுதம் செய்திகளுக்கு பேட்டி அளித்துள்ளார்

டி.வி.யில் விளம்பரம்.. காதில் மைக்.. ஆன்மிக குருவுக்கு லட்சணமா? - விளாசும் செல்வராகவன்

தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுத்துக்கிட்டு, மைக்கெல்லாம் வைத்துக்கொண்டு, உங்களுக்கு தியானம் சொல்லித்தருகிறேன் என்று எல்லாம் சொல்லமாட்டார்கள் என்று இயக்குநர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.

“சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய அச்சுறுத்தல் சீனா” - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

“இந்திய சீன உறவு சீனாவின் பார்வையில் இருந்து” என்கிற தலைப்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி கிண்டி ராஜ் பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய வெளியுறவு துறை செயலாளர் விஜய் கேஷவ கோகலே மற்றும் மெட்ராஸ் ஐ.ஐ.டி.இயக்குநர் காமகோடி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

வேட்டையனுக்கு பிறகு தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ரெடி!.. டி.ஜே.ஞானவேலின் பான் இந்தியா படம்..

ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகியுள்ள வேட்டையன் திரைப்படம், ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், அதன் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கும் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

ஊரகப் பகுதிகளில் உள்ள 5,000 நீர்நிலைகளை புனரமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.

பாலியில் வன்கொடுமை வழக்கு.. மேலும் ஒருவர் கைது

கிருஷ்ணகிரி அருகே போலி என்சிசி முகாமில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாக காவேரிபட்டினம் பகுதியை சேர்ந்த ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பெண்ணுறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி? - மருத்துவர் விளக்கம்

பெண்ணுறுப்பின் சுகாதாரம் பேணுவது மிகவும் அத்தியாவசியம். பெண்ணுறுப்பை எந்தெந்த வகையிலெல்லாம் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள முடியும் என்பது பற்றிப் பார்க்கலாம்.