நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டுத் திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் அவருடைய நற்பணி மன்றங்கள் சார்பில் இரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது சட்டமன்றத் தொகுதி வாரியாக அமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் நற்பணி மன்றம் களமிறங்கியுள்ளது.
தற்போது தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளைத் தொடங்கவும், புதிய உறுப்பினர்களைப் பெருமளவில் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே தனிக்கொடியைப் பயன்படுத்தி வரும் இந்த இயக்கம், தற்போது சட்டமன்றத் தொகுதி வாரியாக உறுப்பினர் சேர்க்கையில் தீவிர கவனம் செலுத்துவது அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோவை மாவட்டத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அடுத்தடுத்து அனைத்துத் தொகுதிகளிலும் உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாகத் திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், ரசிகர்கள் தங்கள் ஒற்றுமையை வெறும் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் புகைப்படங்களோடு நிறுத்திக் கொள்ளாமல், பகுதிவாரியாக ஏழை எளிய மக்களின் தேவைகளை அறிந்து நலப்பணிகளில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலைத் தனது மக்கள் செல்வாக்கை அறியும் முதற்கட்டக் களமாகப் பயன்படுத்தத் தனுஷ் திட்டமிட்டுள்ளதாகப் பேசப்படும் சூழலில், இந்தத் தொகுதி வாரியிலான உறுப்பினர் சேர்க்கை அவரது எதிர்கால அரசியல் விருப்பத்தைச் சூசகமாக உணர்த்துவதாகவே பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7