சினிமா

தமிழ் சினிமாவுக்கு 10 தேசிய விருதுகள்.. ஜனாதிபதி கைகளால் விருது பெற்ற கோலிவுட் நட்சத்திரங்கள்!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் தமிழ் திரையுலகத்தைச் சேர்ந்த 'அமரன்', 'மகாராஜா', 'கேப்டன் மில்லர்' உள்ளிட்ட படைப்புகள் மொத்தம் 10 விருதுகளைப் பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவுக்கு 10 தேசிய விருதுகள்.. ஜனாதிபதி கைகளால் விருது பெற்ற கோலிவுட் நட்சத்திரங்கள்!
National Awards
இந்தியாவின் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விருது வழங்கும் விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. குஜராத் மாநிலம் ஏகதா நகரில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு விருது பெற்ற திரைக்கலைஞர்களுக்குத் தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்தார். இந்த ஆண்டு தமிழ் திரையுலகிற்கு மொத்தம் 10 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

'அமரன்' திரைப்படத்திற்கு 3 தேசிய விருதுகள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'அமரன்' திரைப்படம் 3 முக்கியப் பிரிவுகளில் தேசிய விருதுகளைக் கைப்பற்றியுள்ளது.

சிறந்த இயக்குநர்: ராஜ்குமார் பெரியசாமி

சிறந்த பின்னணி இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

சிறந்த எடிட்டர்: கலைவாணன்

'மகாராஜா' படத்திற்கு 2 விருதுகள்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் 2 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.

சிறந்த துணை நடிகை: சச்சனா நமிதாஸ் (இப்படத்தில் விஜய் சேதுபதிக்குத் மகளாக நடித்ததற்காக)

சிறந்த சண்டை பயிற்சி: அனல் அரசு

தனுஷ் படங்களுக்குக் கிடைத்த 3 தேசிய விருதுகள்

நடிகர் தனுஷ் நடித்து மற்றும் இயக்கிய திரைப்படங்களுக்கு மொத்தம் 3 விருதுகள் கிடைத்துள்ளன.

சிறந்த நடிகர் (சிறப்புப் பிரிவு): 'கேப்டன் மில்லர்' திரைப்படத்திற்காக தனுஷிற்கு வழங்கப்பட்டது.

சிறந்த 'Feature Film' (தேசம், சமூகம், சுற்றுச்சூழல் சிறப்புப் பிரிவு): 'கேப்டன் மில்லர்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.

சிறந்த தமிழ் திரைப்படம்: தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' திரைப்படம் வென்றது. இதற்கான விருதைப் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் காவேரி கலாநிதி பெற்றுக்கொண்டார்.

தொழில்நுட்பப் பிரிவுகள் மற்றும் ஆவணப்பட விருதுகள்

சிறந்த ஒலிக்கலவை (சிறப்புப் பிரிவு): நடிகர் கார்த்தி நடித்த 'மெய்யழகன்' திரைப்படத்திற்காகச் சவுண்ட் இன்ஜினியர் சுரேன்.ஜி தேசிய விருதைப் பெற்றார்.

சிறந்த ஒலிக்கலவை (Non Feature Films பிரிவு): தமிழில் வெளியான 'ப்ளூ' என்ற ஆவணப்படத்திற்காகச் சவுண்ட் இன்ஜினியர் டி.எஸ். ஹரிஹர சுதனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல கலைஞர்கள் ஒரே மேடையில் தேசிய விருதுகளைப் பெற்றுள்ளதற்குத் திரை உலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.