தமிழ் திரையுலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வரும் திரிஷா குறித்துச் சமீபகாலமாகப் பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. திரைப்படங்கள் மட்டுமின்றி அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்தும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், மதுரையில் அவரை அரசியலுக்கு வரவேற்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமீபத்தில் தவெக தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய்யின் பிறந்தநாளுக்குத் திரிஷா தெரிவித்த வாழ்த்து இணையத்தில் விவாதப் பொருளானது. அதனைத் தொடர்ந்து, அவர் அரசியலுக்கு வரப்போவதாகத் தகவல்கள் பரவிய நிலையில், அது குறித்துத் திரிஷா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், மதுரையில் "திரிஷா நற்பணி மன்றம்" சார்பில் அவரை அரசியலுக்கு அழைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் ஆசியுடன் அரசியலுக்கு வருமாறு கோரும் அந்த போஸ்டர்களில், தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம் மதுரை மாவட்டம் திரிஷா நற்பணி மன்றம் தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா பிரபலங்கள் பலரும் வரிசையாக அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வரும் நிலையில், திரிஷாவின் இந்த நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது. ஏற்கனவே அவருடன் திரையில் இணைந்த விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு எதிர்க்கட்சியாக களம் இறங்கும் நோக்கிலேயே திரிஷாவுக்கு இந்த அரசியல் வரவேற்பு அளிக்கப்படுகிறதா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
முன்பு ஒருமுறை, தான் முதலமைச்சராக விரும்புவதாகத் திரிஷா விளையாட்டாகக் கூறிய பழைய வீடியோவும் தற்போது மீண்டும் பகிரப்பட்டு வருகிறது.
இந்த போஸ்டர் விவகாரம் குறித்து நடிகை திரிஷா தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இது அவரது அனுமதியுடன் நடக்கிறதா அல்லது நற்பணி மன்றத்தினர் தானாகச் செய்கிறார்களா என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

LIVE 24 X 7