சினிமா

நூலிழையில் உயிர் தப்பிய எ.ஆர்.ரஹ்மான் மகன்: காலையிலேயே நடந்த கார் விபத்து.

ஆஸ்கார் நாயகன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான எ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் சென்னை கத்திப்பாரா பகுதியில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நூலிழையில் உயிர் தப்பிய எ.ஆர்.ரஹ்மான் மகன்: காலையிலேயே நடந்த கார் விபத்து.
AR Rahman son AR Ameen Accident
ஆஸ்கார் நாயகன் மற்றும் இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான எ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் சென்னை கத்திப்பாரா பகுதியில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து காரில் பயணித்துக் கொண்டிருந்த அமீனும் அவரது நண்பரும் கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த மற்றொரு ரேபிடோ கார் வாகனத்துடன் கார் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதலில் இரு வாகனங்களும் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்தவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரு வாகனங்களை ஒட்டியவர்களும் முன்கூட்டியே சுதாரித்து கொண்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் இருவரது காரின் பக்கவாட்டில் உரசியபடி சென்றதால் காரின் முன்பக்கத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டது. அமீன், அவரது நண்பர் மற்றும் மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். உடனே ஏ.ஆர்.அமீன் மற்றும் இருவரும் காவிரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். எதிர்புறம் வந்த ரேபிடோ கார் ஓட்டுனரை கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

விபத்து குறித்து தகவல் வெளியானதும், ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், அமீனுக்கு பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற தகவல் வெளியாகியிருப்பது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பயணத்தைப் பின்பற்றி சிறு வயதிலேயே பாடகராக அறிமுகமானவர் அமீன். தனது தந்தையின் இசையில் பல்வேறு பாடல்களை பாடியுள்ள அவர், ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மௌலா யா சல்லி வசல்லிம்’ பாடல் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். பிறகு தந்தையின் இசையில் வரும் பல பாடல்களில் பின்னணி பாடகராக பாடியுள்ளார்.

விபத்தில் லேசான காயங்கள் ஏற்பட்டதால் ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பத்தினர் சற்று ஆறுதல் அடைவார்கள்.