#JUSTIN || "வீட்டுக்குள்ளே வரும்..." கண்ணீர் வடிக்கும் ஆர்.கே.நகர் மக்கள் | Kumudam News 24x7
சென்னை ஆர் கே நகர் கொருக்குப்பேட்டை வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்துவருவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை ஆர் கே நகர் கொருக்குப்பேட்டை வீடுகளில் கழிவுநீருடன் மழைநீர் கலந்துவருவதாக புகார் எழுந்துள்ளது.
மதுரையில் கனமழையால் வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மாவட்ட செய்திகள்: Ungal Oor Seithigal | District News | 16-10-2024 | Mavatta Seithigal
Today Headlines : 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Headlines Tamil | 16-10-2024 | Kumudam News24x7
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித் துறையில் செப்டம்பர் மாதம் பள்ளிகளை ஆய்வு செய்யாத 145 வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் காரணமாக கண்காணிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கு, வி.ஏ.ஓக்கள்.
திருப்பதியில் கனமழை காரணமாக ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை நாளை வரை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
‘சாம்சங்’ ஆலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ‘‘கடிதோச்சி மெல்ல எறிதல்’’ என்பதைக் கடைப்பிடித்து, தமிழ்நாடு அரசு Win Win Solution என்ற தீர்வைக் கண்டுள்ளார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராட்டியுள்ளார்.
சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி இருந்த சுரங்கப்பாதைகளில் தற்போது போக்குவரத்து சீரானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள 30 அடி உயர மரம் வேரோடு சாய்ந்ததில் 2 கார் சேதமடைந்தது.
மழைநீர் சூழ்ந்ததால் குளம்போல் காட்சியளிக்கும் சென்னை துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப்பளி வளாகம்.
ஸ்டெர்லைட் வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக சென்னையில் பெய்த கனமழையால் ஜீவா ரயில் நிலையம் அருகே மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. அதில் சிறுவர்கள் குதித்து விளையாடி வருகின்றனர்.
வேளச்சேரி பாலத்தைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலத்தின் இருபுறங்களிலும் ஆட்டோ, கார், வேன், மினி பேருந்து என நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
’நந்தன்’ படத்தை ஓடிடி தளத்தில் பார்த்து பாராட்டிய பாமக தலைவர் அன்புமணி ராமாதாஸுக்கு அப்படத்தின் இயக்குநர் இரா.சரவணன் நன்றி தெரிவித்துள்ளார்.
தவெக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிக தொகுதி பொறுப்பாளர்களை நியமித்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 26ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இருவரும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோதுமை, துவரம்பருப்பு, கடுகு, பார்லி உள்ளிட்ட 6 பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அமைச்சரவை நிர்ணயித்தது.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொட்டும் மழையில் மூதாட்டியை காக்க வைத்த அவலம் நிகழ்ந்துள்ளது, சிடி ஸ்கேன் எடுக்க பணம் கட்டும் வரை கொட்டும் மழையில் ஸ்ட்ரெச்சரில் மூதாட்டி இருந்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை பாராளுமன்ற தொகுதியில் இரண்டு முறை எம்பியாக வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றி கூட சொல்லாத எம்பி சு வெங்கடேசனை கண்டா வரச் சொல்லுங்க என அப்பகுதி மக்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் மழையால் டாஸ் கூட போடாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தெலுங்கில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் பாலகிருஷ்ணாவின் அகண்டா படத்தின் இரண்டாம் பாகம் பூஜையுடன் தொடங்கியது.
அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் நடித்து திரையரங்குகளில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.