மேஷம்
மேஷ ராசியினருக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும், தேவையான பணம் கையில் இருப்பதால் அவற்றைச் சமாளித்துவிடுவீர்கள். கணவன்–மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் உள்ள கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பொருள்வரவுக்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடியாக முடியும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சகோதரர்கள் தொடர்பாக சுபச் செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியினருக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு சில வீண் சங்கடங்களை ஏற்படுத்தக்கூடும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும். தாய்வழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்படலாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை நடைபெறுவதுடன், லாபமும் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இன்று தேவையான பணம் கையில் இருக்கும். சில காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். வீட்டில் உறவினர்களின் வருகையால் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். விற்பனை வழக்கம்போல் நடைபெறும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு தந்தைவழி உறவுகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் உற்சாகம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல இருக்கும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை முழு ஒத்துழைப்பு வழங்குவார். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழல் நிலவும். வியாபாரத்தில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இன்று தெய்வ அனுகிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும், இறுதியில் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. கணவன்–மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்ளலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.
தனுசு
தனுசு ராசியினருக்கு இன்று காரியங்களில் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு குறையலாம். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுடன் செலவும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு செயல்படுவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும்.
மகரம்
மகர ராசியினருக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குடும்ப விஷயமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடலாம். மாலையில் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரலாம். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரலாம். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் யோகம் உண்டு. மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும், அதனால் பெரிய பாதிப்பு இருக்காது.
மீனம்
மீன ராசியினருக்கு இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் வருகையால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரலாம். கணவன்–மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்துகொள்வது மகிழ்ச்சியைத் தரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரம் சுமாராக இருக்கும்.
LIVE 24 X 7









