எந்த வைரஸும் தமிழ்நாட்டில் இல்லை - மா.சுப்பிரமணியன் தகவல்!
தமிழ்நாட்டில் எந்த விதமான வைரஸ் காய்ச்சல்களும் இல்லை, நிபா வைரஸ் பரவலும் கிடையாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மழைக்காலம் வந்துவிட்டால் கூடவே பல்வேறு விதமான நோய்களும் வந்துவிடும். அதில் முக்கியமான ஒன்று டெங்கு காய்ச்சல். தொடக்கத்தில் சாதாரன காய்ச்சல் போல தென்படும் இது, போக போக ஆளையே கொல்லக் கூடிய விஷக்காய்ச்சலாக மாறிவிடும். அப்படிபட்ட கொடிய நோயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதைக் கீழே பார்க்கலாம்.
டெங்கு காய்ச்சல் பொதுவாக Aedes என்ற வகை கொசுக்களினால் உண்டாகும் நோயாகும். மழை நேரங்களில் சாலைகளிலும், வீடுகளிலும் தேங்கி நிற்கும் தண்ணீர் மூலம் இவ்வகை கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகின்றன. டெங்கு காய்ச்சல் பொதுவாக தென்கிழக்கு ஆசியா, ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலேயே அதிகளவு காணப்படுகின்றன. ஆனால் பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது ஐரோப்பா மற்றும் தெற்கு அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த நோய் பரவி வருகிறது. ஆண்டிற்கு சுமார் 4 கோடி பேர் உலகளவில் உந்த காய்ச்சலினால் பாதிக்கப்படுவதாகவும் அதில் 80% பேருக்கு அறிகுறிகள் இருப்பதில்லை எனவும் சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இதனை விரட்ட ஆராய்ச்சியாளர்கள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கொசுக்களினால் பரவும் இந்த டெங்கு காய்ச்சலை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் சுமார் 104 F வரை காய்ச்சல் அடிக்கும். அதுபோக தலைவலி, எலும்பு மற்றும் தசை வலி, வாந்தி, மயக்கம், கண் வலி, கை கால் வீக்கம், உடல் முழுவதும் சிவப்பு தடிப்புகள் உள்ளிட்டவை ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். இவற்றைத் தவிர தீவிர வயிற்று வலி, பற்கள் மற்றும் ஈறுகளில் ரத்தக்கசிவு, சிறுநீரில் ரத்தப்போக்கு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க: 'இல்லத்தார்க்கு உகந்த படம்’ - மெய்யழகன் படத்திற்கு 'யு' சான்றிதழ்!
டெங்கு காய்ச்சல் பொதுவாக ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும். இதனை தொடக்கத்திலேயே சரியாக கவணிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். இந்த காய்ச்சல் தீவிரமானால் ரத்தப்போக்கு, உடல் உருப்புகள் செயலிழப்பு, ரத்தம் உறைவது உள்ளிட்ட தீவிர உடல் உபாதைகள் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் எந்த விதமான வைரஸ் காய்ச்சல்களும் இல்லை, நிபா வைரஸ் பரவலும் கிடையாது. கேரளா - தமிழ்நாடு மாநில எல்லைகளில் பொது சுகாதாரத்துறை தீவிர சோதனை நடத்தி வருகிறது.
பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மை குறித்த முழு உடல் வெப்ப பரிசோதனை முழு வீச்சில் உள்ளது. குரங்கம்மை நோய்க்கென தமிழகத்தில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. மழைக்காலம் வருவதால் எங்கும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?