கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய மாசி தேரோட்டம்.. திரளாக குவிந்த பக்தர்கள்

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தின் மாசி தேரோட்டத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Mar 12, 2025 - 11:17
 0
கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலய மாசி தேரோட்டம்.. திரளாக குவிந்த பக்தர்கள்
கல்யாண வெங்கட்ரமண சுவாமி

கரூரில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு மாசி திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று திருத்தேர் பவனி நடைபெற்றது. அதிகாலை சுவாமி கல்யாண வெங்கட்ரமணர், ஸ்ரீதேவி- பூதேவி தாயாருடன் தேருக்கு வந்தடைந்தார். அதன் பின்னர் இன்று காலை மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் கங்கணம் கட்டி ஆலயத்தின் பட்டாச்சாரியக்கு மாலை அணிவித்து மாசி மாத தேரோட்டம் சிறப்பாக துவங்கியது.

பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆலயத்தில் இருந்து புறப்பட்ட திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வரும் மாசி மாத திருத்தேரோட்டம் நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆன்மிகப் பெருமக்கள் ஆலயத்திற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு தான்தோன்றி மலை போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் என சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Read more:-

பங்குனிப் பெருவிழா.. அன்ன வாகனத்தில் எழுந்தருளிய முருகன்-தெய்வானை

சுப்ரமணிய சுவாமி கோயிலில் விமர்சையாக நடைபெற்ற யானை வாகன பெருவிழா

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow