Erode ByElection 2025: "58" வேட்பாளர்கள் 65 வேட்பு மனுக்கள் தாக்கல்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 4 வேட்பாளர்கள் உட்பட 58 வேட்பாளர்கள் 65 வேட்புமனுத்தாக்கல் செய்து இருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10ம் தேதி தொடங்கியது.
வேட்புமனுதாக்கல் செய்ய 10ம் தேதி முதல் 17தேதி வரை இருந்த நிலையில் சனி,ஞாயிறு மற்றும் பொங்கல் அரசு விடுமுறை தவிர்த்து வேட்பாளர்கள் 10,13,17ஆகிய தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் அவருக்கு மாற்று வேட்பாளராக மேனகா நவனீதனும், திமுக சார்பில் விசிக சந்திரகுமாரும், அவரது மனைவி அமுதாவும் அவருக்கு மாற்று வேட்பாளராக வேட்புமனுத்தாக்கல் செய்தனர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்டவர்கள் சுயேட்சை வேட்பாளர்களாக வேட்புமனுத்தாக்கல் செய்தனர். மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு காத்திருந்து வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து வேட்புமனுத்தாக்கல் நிறைவு குறித்து செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் , இன்று மட்டும் 55 வேட்புமனுத்தாக்கல் செய்தனர்,இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில் அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்த 4 பேர் உட்பட 40 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
உரிய ஆவணங்கள் இன்றி 12 லட்சத்து 72 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் திரும்ப வழங்கப்பட்டுள்ளது.மீதம் பறிமுதல் செய்யப்பட்ட 9லட்சத்து 42ஆயிரம் ரூபாய் கருவூலத்தில் ஓப்ப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மனிஷ் வேட்பு மனு பரிசீலினை நாளை காலை 11 மணிக்கு நடைபெறும், தொடர்ந்து 20 ம் தேதி தான் 3 மணி வரை வேட்புமனுவாபஸ் பெறலாம் என்றும் அதன்பிறகு சின்னம் ஓதுக்கீடு செய்து வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றார்.
மேலும் இதுவரை தேர்தல் விதிமுறை மீறியதாக 5 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் , தேர்தல் ஆணையத்தின் சியுஜி செயலி மூலம் 3 புகார் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வேட்பாளர்கள் சின்னம் ஒதுக்கீடு என்பது அங்கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமையும்,சுயேட்சை வேட்பாளர்கள் ஒரே சின்னத்தை இருவர் அதற்கு மேற்பட்டவர்கள் கேட்கும் போது குலுக்கல் முறையில் வழங்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்தார்.
What's Your Reaction?