மத்திய உள்துறை அமைச்சர் இப்படியெல்லாம் பொய் பேசலாமா?- அமைச்சர் சிவசங்கர் கேள்வி
மத ரீதியாக பிரிக்கலாம் என பாத்தாங்க, தமிழ்நாட்டில் அதுக்கு இடமில்லை, முருகனுடைய வேலை தூக்கிக்கொண்டு சுற்றி வந்து பார்த்தார்கள். அம்மனை சொல்லி பார்த்தார்கள், ஏதாவது சொல்லி பார்த்தார்கள் எதுவும் எடுபடவில்லை

அரியலூரில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், இந்தியாவினுடைய உள்துறை அமைச்சராக இருக்கின்ற அமித்ஷா பொய் பேசுவது என்பது மிகுந்த கட்டணத்திற்குரியது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
பொய் செய்தியை பரப்புகிறார்கள்
தமிழ்நாட்டில் ஏற்கனவே கலைஞர் முதலமைச்சராக இருக்கின்றபோது பொறியியல் படிப்பதற்கு தமிழ் வழி படிக்கலாம் என்பதற்கு கொண்டுவரப்பட்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் அந்த படிக்கின்ற வாய்ப்பு இருக்கிறது. எனவே இருக்கின்ற செய்தியை மறைத்து இப்படித்தான் வட இந்தியாவில் பேசுவார்கள், எந்த செய்தியையும், உண்மை தன்மையை மாற்றி அவர்கள் ஒரு செய்தியை பொய் செய்தியாக பரப்புவார்கள்.
Read more : தவெகவினருக்கு அனுமதி மறுப்பு – போலீசார் தடுத்ததால் பரபரப்பு
அதுபோல் தமிழகத்தில் மீண்டும், மீண்டும் செய்யலாம் என்று தான் அவர்கள் ஒவ்வொரு முறையும் முயன்று பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். தோல்வி அடைந்து கொண்டிருக்கிறார்கள்.ஏற்கனவே மத ரீதியாக பிரிக்கலாம் என பாத்தாங்க, தமிழ்நாட்டில் அதுக்கு இடமில்லை, முருகனுடைய வேலை தூக்கிக்கொண்டு சுற்றி வந்து பார்த்தார்கள். அம்மனை சொல்லி பார்த்தார்கள், ஏதாவது சொல்லி பார்த்தார்கள் எதுவும் எடுபடவில்லை.
அண்ணாமலை போன்று பேசுவது கண்டிக்கத்தக்கது
இன்றைக்கு புதிதாக ஒரு கதை. ஏற்கனவே, பிரதமர் மோடி இங்கு வரும்போது இதையே கூறினார். தமிழில் பொறியியல் படிப்பதற்கான வாய்ப்பு தமிழகத்தில் கலைஞர் கொண்டு வந்திருக்கிறார். மருத்துவ கல்விக்கான தமிழ் படிப்பும் இருக்கிறது. ஆய்வு செய்து பேச வேண்டும். மத்திய அமைச்சகத்தின் மிக சக்தி வாய்ந்த உள்துறை அமைச்சராக இருப்பவர் பொறுப்பற்ற தன்மையில், அண்ணாமலை போன்று பேசுவது என்பது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
What's Your Reaction?






