உலகம்

இந்தியா, சீனா, பிரேசிலுக்கு அமெரிக்கா மிரட்டல்.. பொருளாதாரத்தை நசுக்குவோம் என எச்சரிக்கை!

ரஷ்ய அதிபர் புதினுக்கு உதவியதற்காக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைத் அதிபர் டிரம்ப் தண்டிக்கப் போவதாக அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.

இந்தியா, சீனா, பிரேசிலுக்கு அமெரிக்கா மிரட்டல்.. பொருளாதாரத்தை நசுக்குவோம் என எச்சரிக்கை!
இந்தியா, சீனா, பிரேசிலுக்கு அமெரிக்கா மிரட்டல்.. பொருளாதாரத்தை நசுக்குவோம் என எச்சரிக்கை!
உலக அரசியலில் புதிய திருப்பமாக, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினுக்கு பொருளாதார ரீதியாக உதவியளிக்கின்றதாகக் கூறப்படும் இந்தியா, சீனா மற்றும் பிரேசிலை குறிவைத்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக அமெரிக்காவின் முக்கிய செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரிக்கை விடுத்துள்ளார்

அமெரிக்க ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் லிண்ட்சே கிரஹாம் கூறியதாவது, “உலக சந்தையில் ரஷ்யா உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயில் 80 சதவீதம் வரை இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் குறைந்த விலையில் வாங்கி வருகின்றன. இதன் மூலம் ரஷ்யாவின் போர் இயந்திரம் தொடர்ந்து செயல்படுகிறது. உக்ரைன் மீது நடக்கும் இந்த தாக்குதலுக்கு நிதி ஆதாரமாக இத்தகைய வர்த்தகம் உள்ளது, என அவர் குறிப்பிட்டார்.

மேலும், “இந்தியாவும், சீனாவும், ரஷ்யாவுடன் பண்பட்ட உறவுகளை கொண்டே போர் காலத்திலும் பொருளாதார ஆதரவை வழங்கி வருகின்றன. இதை நாம் மேலும் அனுமதிக்க முடியாது. அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால், இந்த நாடுகளின் பொருளாதாரத்தை 100 சதவீத வரிவிதிப்புகள் மூலம் நசுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என கடுமையாக எச்சரித்தார்.

அத்துடன், “உலக மக்கள் போருக்கு எதிராக உள்ளனர். ஆனால், சில நாடுகள் தங்களது வர்த்தக நலன்களை முன்னிலைப்படுத்தி புதினுக்கு நேரடி ஆதரவு அளிக்கின்றன. இது முற்றிலும் தவறு. வர்த்தக ஒப்பந்தங்கள், ஆதரவுகள் அனைத்தும் இந்தப் போரை நீடிக்கச்செய்யும் காரணமாக மாறியுள்ளன,” என்றார்.

இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் தற்போது ரஷ்யாவுடன் எண்ணெய் மற்றும் பல்வேறு பொருட்களில் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றன. மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகள் இருந்தபோதும், ரஷ்யா தனது பொருளாதாரத்தை நிலைத்துவைக்க இந்த நாடுகளின் ஆதரவே முதன்மையானதாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ரஷ்யா - உக்ரைன் போர் நீடிக்க இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தொடர்ந்து உதவினால் அந்த நாடுகளின் பொருளாதாரத்தை நாங்கள் நசுக்குவோம் என்று எச்சரித்துள்ளார். அதேவேளையில் அமெரிக்காவின் எச்சரிக்கையை கண்டுகொள்ளாமல் இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லிண்ட்சே கிரஹாமின் எச்சரிக்கை ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் மட்டுமன்றி, இந்தியா-அமெரிக்கா உறவுகளிலும் புதிய சிக்கல்களை உருவாக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.