Solar Magnetic Storms Alert : சூரியனின் மேற்பரப்பில் உண்டாகும் வெடிப்புகளை நாம் காந்தப்புயல் என்கின்றோம். ஒவ்வொரு முறை இந்த காந்தப்புயல் உருவாகும்போதும் அவை பூமியை மிகப்பெரிய அளவில் தாக்கி வருகின்றன. சூரியனின் ஒரு சுழற்சிக்கு சுமார் 11 ஆண்டுகள் தேவைப்படும். எனவே 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனின் சக்தி அதிகரிக்கும்போது இதுபோன்ற சூரிய காந்தப்புயல்கள் உருவாகும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த சமயத்தில் சூரியனை தொலைநோக்கியின் வாயிலாகவோ அல்லது சூரிய வடிகட்டிகளின் மூலம் பார்க்கும் பொழுது அதில் சில கரும்புள்ளிகள் தென்படும் இதை விஞ்ஞானிகள் star parts என்கின்றனர்.
இந்த star parts ஐ ஆய்வு செய்வதற்காகவும் இஸ்ரோவின் ஆதித்யா எல்1 விண்கலமும், நாசாவின் பார்க்கர் சோலார் ப்ராப் (Parker Solar Probe)-உம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு உருவான ஒரு சூரிய காந்தப்புயலை இந்த விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியது. அந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலானது. இதையடுத்து கடந்த மே மாதம் உருவான ஒரு காந்த புயல் பூமியை பெருமளவில் தாக்கியது. இதுமட்டுமில்லாமல் இந்த சூரிய புயலால் துருவ பகுதிகளில் இருக்கும் கனடா, அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அரோரா என்றழைக்கப்படும் ஒளிக்கீச்சு வானில் தோன்றியதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: கங்குவா இசை வெளியீட்டு விழா தேதி... சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..?
இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதி, AR3842 என்ற சூரியப் புள்ளியிலிருந்து X7.1 அளவு கொண்ட சக்திவாய்ந்த ஒரு வெடிப்புத் தோன்றியது. அதை விஞ்ஞானிகள் கண்காணித்து வரும் நிலையில், தற்போது மீண்டும் அதே சூரிய புள்ளியிலிருந்து மீண்டும் X9.05 அளவுக்கொண்ட அதிக சக்தி வாய்ந்த வெடிப்பு ஒன்று தோன்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த புயலில் இருந்து வெளியான கதிர்வீச்சினால் ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 30 நிமிடங்கள் ரேடியோ சிக்னல் பெரிதளவில் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் இன்றும் ஒரு சூரிய காந்த புயல் ஏற்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலினால் உண்டாகும் கதிர் வீச்சு, பூமியை தாக்கக்கூடும் என்றும் செயற்கைக்கோள்கள் பாதிக்கப்படும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.