உலகம்

புதிய போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதிய போப் பதினான்காம் லியோவிற்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் மோடி வாழ்த்து

 புதிய போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
புதிய போப் பதினான்காம் லியோ மற்றும் பிரதமர் மோடி
புதிய போப்பிற்கு வாழ்த்து

புதிய போப் பதினான்காம் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ புதிய போப் பதினான்காம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் நல்வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சேவையின் கொள்கைகளை முன்னேற்றுவதில் ஆழ்ந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தருணத்தில் கத்தோலிக்க திருச்சபையில் அவரது தலைமையத்துவம் தொடங்குகிறது.

இந்தியா உறுதிபூண்டுள்ளது

நமது பகிரப்பட்ட மதிப்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக, புனித ரோம் கத்தோலிக்க திருச்சபையுடன் தொடர்ந்து உரையாடல் மற்றும் ஈடுபாட்டிற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.” என பதிவிட்டுள்ளார். புதிய போப்பாக அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டதாக வாடிகன் நேற்று அறிவித்தது. அமெரிக்கவர் ஒருவர் முதல்முறையாக போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.