சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் இந்திய தொழில்துறை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது இந்தியாவுக்கு தேவையான உரங்கள், அரிய தாதுக்கள் மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்களை மீண்டும் ஏற்றுமதி செய்யச் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாகச் சீனா தனது ஏற்றுமதியில் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக, இந்தியாவின் வேளாண்மைத் துறைக்குத் தேவையான உரங்கள், பல்வேறு தொழில்களுக்கு அவசியமான அரிய தாதுக்கள், மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களின் முக்கிய கருவியாகிய சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி தடை செய்யப்பட்டது.
இந்தக் கட்டுப்பாடுகளால், இந்திய தொழில்துறை மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. வேளாண்மைப் பயிர்செய்கையில் உரக் குறைபாடு ஏற்பட்டது. அதேசமயம், சுரங்கத் துறை மற்றும் மெட்ரோ ரயில், சாலை, நீர்வழங்கல் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களும் மந்தமாகின.
இந்நிலையில், தற்போது சீனா இந்த ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், இந்தியாவின் வேளாண்மை, சுரங்கம், மற்றும் உள்கட்டமைப்புத் துறைகள் பெரும் நிவாரணத்தை அடையும் நிலையில் உள்ளன.
“சீனா எடுத்துள்ள இந்த முடிவு, கடந்தகாலத்தில் நிலவிய வர்த்தகப் பதற்றங்களை குறைத்து, இரு நாடுகளுக்கும் இடையே புதிய நம்பிக்கையை உருவாக்கும். எல்லைப் பிரச்சனை போன்ற நுணுக்கமான விஷயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளைச் சமாளிக்கவும் இது உதவலாம்” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சீனாவின் இந்த முடிவு, இந்தியாவுக்கு அரசியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.