உலகம்

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள்.. பஞ்சாப் வந்தடைந்த விமானம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104  இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங்கியது.

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள்.. பஞ்சாப் வந்தடைந்த விமானம்
அமெரிக்க ராணுவ விமானம்

அமெரிக்காவில் கடந்த 20-ஆம் தேதி அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதல் படியாக அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறிவர்களை நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில், பிரேசில், மெக்​சிகோ, இந்தியா உட்பட பல்வேறு நாடு​களின் குடிமக்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்​பப்​பட்டு வருகின்றனர். அதன்​படி, சி-17 என்ற ராணுவ விமானத்​தில் நேற்று 104 இந்தி​யர்கள் அமெரிக்​கா​வில் இருந்து திருப்பி அனுப்​பப்​பட்​டனர். அவர்கள் வந்த ராணுவ விமானம் நேற்று  பிற்​பகல் பஞ்சாப் மாநிலம் அமிர்​தசரஸ் குருராம் தாஸ் சர்வதேச விமான நிலை​யத்தை வந்தடைந்தது.

அமெரிக்க ராணுவத்தின் விமானம் மூலம் 79 ஆண்களும் 25 பெண்களும் நாடு திரும்பி உள்ளனர். இதில், 30 பேர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், ஹரியானா, குஜராத்தை சேர்ந்த தலா 33 பேர், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், சண்டிகரை சேர்ந்த 2 பேரும் இதில் அடங்​கு​வர்.

முன்னதாக அமெரிக்​கா​வில் இருந்து 205 இந்தி​யர்கள் நாடு கடத்​தப்​பட்​டதாக தகவல் வெளி​யானது. எனினும், இந்தி​யர்கள் எத்தனை பேர் இதுவரை திருப்பி அனுப்​பப்​பட்​டனர் என்று அதிகாரப்​பூர்​வமாக தகவல் வெளி​யிட​வில்லை. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார்.

இதுகுறித்து பேசிய டிரம்ப், “சட்டவிரோதமாக அமெரிக்காவில்  குடியேறியவர்கள் தொடர்பாக மோடியுடன் விவாதித்ததாக தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி சட்டவிரோதமாக குடியேறியவர்கள் குறித்து சரியானதைச் செய்வார்” என்று கூறினார். இதையடுத்து இந்தி​யர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடங்கி உள்ளது.

இதற்​கிடை​யில், வரும் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்​கிறார். அப்போது அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து இருநாட்டு உறவை மேம்​படுத்துவது குறித்து பேச்சு​வார்த்தை நடத்த உள்ளார். அமெரிக்​கா​வில் 18 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட இந்தி​யர்கள் சட்ட​விரோதமாக குடியேறியுள்ளதாக புள்ளி விவரம் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.