தனது தனித்துவமான உடல் மொழியாலும், இயல்பான நகைச்சுவையாலும் தமிழ் சினிமா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் பிரபல நடிகர் ரோபோ சங்கர். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு வந்த இவர் உடல்நலக்குறைவால் கடந்த 18ம் தேதி வியாழக்கிழமை இரவு காலமானார்.
ரோபோ சங்கர் படத்துடன் போஸ்டர்
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 46 வயதிலேயே அவர் இறந்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியது.
இந்நிலையில், ரோபோ சங்கர் மறைவை எடுத்துக்காட்டாக காட்டி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வுகாக என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.அதில் ‘என்ன தொட்டான்.. அவன் கெட்டான்’ என்ற தலைப்பில் எனக்கு மொழி, இனம், சாதி, மதம், நாடு, ஆண், பெண், இரவு, பகல், சின்னவன், பெரியவன், ஏழை, பணக்காரன், அரசன், ஆண்டி, அதிபதி, போண்டி, சர்வாதி, அடிமை, இவைகளை எனக்குப் பிரித்துப் பார்க்க தெரியாது என்றும் என்ன தொட்டான்... அவன் கெட்டான் என்ற வாசகத்துடனும் வரிகள் நிறைவடைகிறது.
போஸ்டருக்கு கண்டனம்
மேலும் ஒரு பக்கத்தில் உயிரிழந்த ரோபோ சங்கரின் திருவுருவப்படம் அச்சிடப்பட்டிருந்தது. இறுதியாக விழிப்புணர்வுக்காக என்றும் கணேசன் மளிகை என விலாசம் மற்றும் தொடர்பு எண்ணுடன் அந்த சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளது.
விழிப்புணர்வுக்காக என்று உயிரிழந்தவரின் பெயரை களங்கப்படுத்துவதுபோல் அச்சிடப்பட்ட இந்த சுவரொட்டி விளம்பரத்தை பலரும் கண்டனத்தை பதிவு செய்கின்றனர்.