புதுக்கோட்டை மாவட்டம்,கே.புதுப்பட்டி அருகே உள்ள நம்பூரணிபட்டி கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செம்பக சாஸ்த அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலை அப்பகுதியில் வசிக்கும் ஒரே சமூகத்தைச் சேர்ந்த 84 கிராம மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். மேலும் அந்தக் கோயிலில் வழிபாடு நடத்தும் மக்கள் இரு தரப்பினராக உள்ளனர். மேலும் அந்தக் கோயிலில் விழா நடத்துவதில் இரு தரப்பினருக்குமிடையே பிரச்சனையும் இருந்து வருகிறது.
கோயில் கதவை பூட்டிய அதிகாரிகள்
இந்நிலையில் கடந்த வாரம் சம்பந்தப்பட்ட கோயிலில் உள்ளூர் மக்கள் விளக்கு பூஜை நடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று ஆடி வெள்ளி கிழமையை முன்னிட்டு கோயில் வளாகத்தில் விளக்கு பூஜை நடத்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முடிவு செய்து பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்தில் கூடியிருந்தனர்.
ஆனால் அவர்களுக்கு காவல்துறையினர் விளக்கு பூஜை நடத்த அனுமதி வழங்காததால் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூடியிருந்த மக்களை பொருட்படுத்தாமல் கோயில் கதவுகளை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு நம்பூரணிப்பட்டி விலக்கு பகுதியில் அறந்தாங்கி - காரைக்குடி செல்லும் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொட்டும் மழையில் மறியல்
இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற கே.புதுப்பட்டி போலீசார் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மறியலில் ஈடுபட்டவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் கதவை திறக்கும் வரை மறியலை கைவிடப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறி மறியலை தொடர்ந்தனர்.
பின்னர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் வந்து மறியல் செய்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் பொதுமக்கள் மறியலை தொடர்ந்தனர். அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்கள் "கோயில் கதவ திறக்க சொல்லுங்கள். சாமி கும்பிட கூடாதுன்னு சொல்ல இது என்ன மன்னர்காலமா? என கேள்வி எழுப்பினர். ஒரு கட்டத்தில் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு உருவாகும் சூழல் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு அதிவிரைவுப் படையினர் வரவழைக்கப்பட்டனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் அவ்வழியாக சென்ற லாரி கண்ணாடி மீது கல் எரிந்து சேதப்படுத்தினார். இதனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.