துணைவேந்தர்கள் மாநாடு
நீலகிரி மாவட்டம், உதகையில் ஆண்டுதோறும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு ஆளுநர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரு தினங்கள் உதகை ராஜ்பவனில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இதிஷ் குடியரசுத் துணைத் தலைவர் ஜெக்தீப் தன்கர், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் மாநாட்டை துவக்கி வைக்க உள்ளனர்.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்த ஆளுநர் கோவையில் இருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக உதகை வந்தடைந்தார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
குடியரசு துணைத்தலைவர் மற்றும் தமிழக ஆளுநர் ஆகியோர் உதகை வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.முன்னதாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “ தமிழகத்தில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் துணைவேந்தர்கள் மாநாடு ஏப்.25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது. தமிழக ஆளுநரும், மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமையில் மாநாடு நடைபெற உள்ளது” என கூறப்பட்டிருந்தது.