தமிழ்நாடு

திருவண்ணாமலை: சிவாச்சாரியாரிடம் புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேட்டதால், கோயில் குருக்கள் தர்ணா..!

Tiruvannamalai Protest : அருணாசலேஸ்வரர் கோவிலின் தலைமை சிவாச்சாரியாரும் இளவரசு பட்டம் பெற்ற P.T.ரமேஷ் குருக்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேள்வி கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவண்ணாமலை: சிவாச்சாரியாரிடம் புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேட்டதால், கோயில் குருக்கள் தர்ணா..!
திருவண்ணாமலை: சிவாச்சாரியாரிடம் புரோக்கர் வேலை செய்கிறீர்களா? என்று கேட்டதால், கோயில் குருக்கள் தர்ணா..!

Tiruvannamalai Protest : அருணாசலேஸ்வரர் கோவிலின் தலைமை சிவாச்சாரியாரும் இளவரசு பட்டம் பெற்ற P.T.ரமேஷ் குருக்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கேள்வி கேட்டதால், கோவிலில் பூஜைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு சிவாச்சாரியார்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

திருவண்ணாமலை மாநகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் பரம்பரை பரம்பரையாக சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் பணியை மேற்கொண்டு வரும் தலைமை குருக்களை என்ன புரோக்கர் வேலை செய்கிறீர்களா என்று கேட்ட இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் ஜோதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  அது மட்டுமில்லாமல் கோவிலில் தலைமை குருக்களை பார்த்து புரோக்கர் என்று கேட்டதால் கோவிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளையும் நிறுத்திவிட்டு சிவாச்சாரியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவில் யாகசாலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கோவில் சிவாச்சாரியார்களின் பல ஆண்டு காலமாக இருந்து வந்த பிரச்சனை இன்று  பூதாகரமாக வெடித்தது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்களும் அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் அனைத்தும் கோவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் நிலையில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவில் உலகப் புகழ்பெற்ற கோயிலாகும்.   இந்நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிப்படி சுவாமிக்கு தினம்தோறும் அபிஷேகம் செய்து வரும் தலைமை குருக்கள் பி.டி.ரமேஷ் அவர்களை பார்த்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி புரோக்கர் வேலை பார்க்கிறீர்களா என்று கேள்வி கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இத்தகைய உலகப் புகழ்பெற்ற கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி கோவில் குருக்களை பார்த்து புரோக்கர் என்று கூறியுள்ளார்.

இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் குருக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள யாக சாலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து கோவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்திருந்த அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், தலைவர் என்ற முறையில் எனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்று கோவில் மேலாளர் செந்தில் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் நான் தகவல் உங்களுக்கு தெரிவித்தேன் என்றும் அதற்கு சொல்லி கீச்சிங்க!! என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு காணப்பட்டது. மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை ஈடுபட்டு வருகிறது.