தமிழ்நாடு

முதல்வர் கையை அழுத்தி பிடித்த பெண்...சட்டென முகம் மாறியதால் பரபரப்பு

திருச்சி அரசு மருத்துவமனை அருகே நடிகர் சிவாஜி கணேசன் சிலையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 முதல்வர் கையை அழுத்தி பிடித்த பெண்...சட்டென முகம் மாறியதால் பரபரப்பு
திருச்சியில் சாலை ஓரத்தில் நின்றிருந்த தொண்டர்களை சந்தித்தபோது பெண் ஒருவர் முதல்வர் கையைப்பிடித்து இழுத்ததால் பரபரப்பு
சிவாஜி கணேசன் சிலை திறப்பு

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை அருகே வயலூர் செல்லும் சாலையில் (ஈ.வி.ஆர். சாலை) பகுதியில் 64.58 சதுர அடி பரப்பளவில் அரசு வழிகாட்டுதல் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அந்த இடத்தை அதன் உரிமையாளர்கள் (மரகதம், பூரணி, தரணி) ஆகியோர் தானமாக மாநகராட்சி மேயர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் அவ்விடத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.இரண்டு நாள் சுற்றுப் பயணமாக திருச்சி வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்விழாவில் கலந்து கொண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திருவுருவ சிலையினை திறந்து வைத்தார்.

முதல்வர் கையை அழுத்தி பிடித்த பெண்

முன்னதாக திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவிற்காக தமிழக முதலமைச்சர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் இருந்து சாலை ஓரமாக திரண்டு இருக்கும் தொண்டர்களை சந்தித்து கைகுலுக்கியவாறு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென பெண் ஒருவர் ஆர்வமிகுதியால் தமிழக முதல்வர் கையைப் பிடித்து இழுத்ததால் சிறிது நேரம் நின்று கையை பார்த்தவாறு நின்றார். பெண் கையைப்பிடித்து அழுத்தி இழுத்ததால் அடுத்தடுத்து தொண்டர்களுக்கு கைக்கொடுக்காமல் வணக்கம் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.