தமிழ்நாடு

’இதுக்கு என்ன அர்த்தம்?’ நேரில் விளக்கமளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு பறந்த உத்தரவு..

ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியதன் அர்த்தம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு  மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருவொற்றியூரை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் உதவி கமிஷனர் இளங்கோவன், தலைமையில் போலீசார், அங்கு வசிக்கும் சரித்திர பதிவேடு ரவுடிகளின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து , ஒழுக்கமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் என்கவுண்டர் செய்ய வாய்ப்புள்ளது என்று கூறிய காட்சிகள் யூடியூப் சேனல் ஒன்றில் வெளியானது.

இந்த காட்சிகளின் அடிப்படையில், தானாக முன்வந்து வழக்காக எடுத்து, மனித உரிமைகள் ஆணைய தலைவர் நீதிபதி மணிக்குமார், உறுப்பினர் கண்ணதாசன்
அமர்வு விசாரணை நடத்தியது.

அப்போது ஆஜரான உதவி ஆணையர் இளங்கோவன், சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் எச்சரிக்கை செய்ததாக குறிப்பிட்டார்.

அப்போது குறுக்கிட்ட ஆணையத்தின்  தலைவர் நீதிபதி மணிக்குமார், ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என்று கூறியதன் அர்த்தம் என்ன என கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: ஓராண்டை நிறைவு செய்த காசா போர்..உருத்தெரியாமல் போன காசா… அடையாளங்கள் அழிந்தது எப்படி?!

அதற்கு தெரியாது என உதவி ஆணையர் பதில் அளித்ததால், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் வரும் 14ம் தேதி நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.