தமிழ்நாடு

பள்ளி மாணவிகளை சீரழித்த கொடூர தம்பதி... 7 ஆண்டுகள் தலைமறைவு... செக் வைத்த சிபிசிஐடி!

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

பள்ளி மாணவிகளை சீரழித்த கொடூர தம்பதி... 7 ஆண்டுகள் தலைமறைவு... செக் வைத்த சிபிசிஐடி!

பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணவன்- மனைவியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

மாணவிகள் கடத்தல்

கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்த 14 வயது மற்றும் 13 வயதுடைய பள்ளி மாணவிகள் 2 பேரை கடந்த 2014-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (39), இவரது மனைவி தமிழரசி (39) ஆகியோர் கடத்தி சென்றனர். பின்னர் மாணவிகளை திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், நெய்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்திச் சென்று அங்குள்ள புரோக்கர்கள் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர். 

பின்னர் ஒரு வாரத்திற்கு பிறகு மாணவிகள் வீடுகளுக்கு திரும்பி வந்தனர். அப்போது மாணவிகள் 2 பேருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் பெற்றோர் மாணவிகளிடம் விசாரித்த போது, மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை கூறி கதறி அழுதனர்.  இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

தம்பதி கைது

இதையடுத்து சதீஷ்குமார், தமிழரசி உள்பட 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடந்த 2016 ஆம் ஆண்டு இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதோடு, கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு நடந்தது கொண்டிருந்த போது சதீஷ்குமார், தமிழரசி ஆகியோர் 2018-ம் ஆண்டு தலைமறைவாகினர். இருப்பினும் கடந்த 4.1.2019 அன்று இவ்வழக்கில் தொடர்புடைய 16 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரை போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஜெபினா (40) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 

மேலும் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், தமிழரசியை தேடி வந்த நிலையில், சதீஷ்குமார் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவது தெரியவந்தது. இதையடுத்து கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு சதீஷ்குமாரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையில் வீட்டு வேலை செய்து அங்கேயே தங்கி இருந்த தமிழரசியையும் போலீசார் கைது செய்து கடலூர் அழைத்து வந்தனர். இந்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more:IMAX திரையில் மோகன்லால்..புதிய அத்தியாயத்தை தொடங்கும் மலையாள சினிமா