தமிழ்நாடு

ஜம்மு-காஷ்மீர் எதிரொலி: நீலகிரியில் கண்காணிப்பு பணி தீவிரம்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் எதிரொலி: நீலகிரியில் கண்காணிப்பு பணி தீவிரம்
ஜம்மு-காஷ்மீர் எதிரொலி: நீலகிரியில் கண்காணிப்பு பணி தீவிரம்
நீலகிரி மாவட்டம் உதகை மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றாக உதகை உள்ளதால் விடுமுறை மற்றும் கோடைக்காலங்களில் இங்கு சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கோடைக்காலங்களில் உதகையை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து, வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இ-பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. ஆனால், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் காஷ்மீரில் நடந்த துப்பாக்கி  சூடு சம்பவத்தின் எதிரொலியாக உள்ளூர், வெளியூர் என அனைத்து வாகனங்களும் நீலகியில் உள்ள 16 சோதனைச்சாவடிகளிலும் காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டத்தில் வரும் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் துணைவேந்தர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர்.