தமிழ்நாடு

வேலூரில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை..வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

கோடை காலத்தில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

 வேலூரில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை..வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
வேலூரில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழை
ஆலங்கட்டி மழை

வேலூர் மாவட்டத்தில் கடந்த 1 மாதத்திற்கு மேலாக 100 முதல் 105 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வெப்ப காற்றும் வீசி வருகிறது. அதேபோல இன்றும் காலை முதல் கடும் வெயில் வேலூர் மாவட்டத்தில் வாட்டி வதைத்து வந்தது.

இந்த நிலையில், குடியாத்தம் சுற்றுவட்டார உட்பட்ட பகுதியில் திடீரென நான்கு மணி முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென வெப்பச்சலனம் காரணமாக காற்று வீசத் தொடங்கிய சிறிது நேரத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது.

வெப்பம் தணிந்தது

திடீர் ஆங்கட்டி மழையின் காரணமாக குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீர் ஆலங்கட்டி மழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

மேலும் பலத்த காற்றுடன் பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளது. வாழை மரங்கள் முழுவதும் பலத்த காற்றின் காரணமாக சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் சிலர் இடங்களில் தென்னை மரங்கள் உள்ளிட்டவை வேரோடு சாய்ந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோவை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. பலத்த காற்றின் காரணமாக மரங்கள் சாய்ந்துள்ளது.