காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூர் பகுதியில் வசிப்பவர் 20 வயதான இளம் பெண். அவருடைய கணவர் ராணுவத்தில் பணி செய்கின்றார். இந்நிலையில் அப்பெண் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணி முடித்துவிட்டு நாவலூர் வரும்போது பேருந்து வசதி இல்லாததால் அந்த வழியே வந்த ஒரு வாலிபரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். காக்கி கலர் சட்டை அணிந்த அந்த வாலிபர் அப்பெண்ணினை பைக்கில் ஏற்றிக்கொண்டு நாவலூர் பகுதியில் இறக்கி விடாமல் ஏரிக்கரை பகுதிக்கு அழைத்து சென்று அங்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியுற்ற அப்பெண் கீழே கிடந்த மதுபான பாட்டிலை எடுத்து அந்த வாலிபரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பதறிப்போன வாலிபர் பைக்கில் ஏறி தப்பியுள்ளார். இச்சம்பவத்திற்கு பிறகு அப்பெண் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மணிமங்கலம் காவல்துறையினர், அப்பெண் கூறிய அடையாளங்களை வைத்து அதே நாவலூர் பகுதியில் தங்கியுள்ள வாலிபர் ஒருவரை கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட வாலிபர் பெயர் காந்தியப்பன் என்பதும் (வயது 24) நாவலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. விசாரணையின் போது பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டதால் அவரை மணிமங்கலம் காவல் துறையினர் கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.
சுமார் 2000-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த நாவலூர் பகுதியில் நுழைவு வாயிலில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற இப்பகுதியில் புறக்காவல் நிலையம் இருந்தும் கண்காணிப்பு கேமரா வைக்காதது குற்ற செயல்கள் அதிகரிக்க உறுதுணையாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.