தமிழ்நாடு

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சூரியவன்ஷி இளம் வயதில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்று பீகாரில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமர் மோடி பாராட்டு!
இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமர் மோடி பாராட்டு
பீகார் மண்ணின் சமஸ்திபூர் பகுதியை சேர்ந்த மகன் வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி, இந்த இளம் வயதிலும் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அவரது சாதனையின் பின்னால் கடின உழைப்பு இருக்கிறது என்று, பீகாரில் கேலோ இந்தியா யூத் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை வெகுவாகப் பாராட்டினார். பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் 7வது ’கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் மோடி காணொளிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய பிரதமர், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்துப் பேசிய அவர், 2036 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். நாட்டில் விளையாட்டு கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் பட்ஜெட்டில் விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி 3 மடங்கு அதிகரித்து 4 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்

நான் ஐ.பி.எல் தொடரைப் பார்த்தேன் அதில், பீகார் மண்ணின் மகன் வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த இளம் வயதில் அவர் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையின் பின்னணியில் அவரது கடின உழைப்பு உள்ளது. அவர் தனது திறமையை வெளிக்கொண்டு வர பல போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்த சாதனையின் பின்னணியில் அவரது கடின உழைப்பு உள்ளது. அவர் தனது திறமையை வெளிக்கொண்டு வர பல போட்டிகளில் விளையாடியுள்ளார். நீங்கள் எவ்வளவு அதிகமாக விளையாடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் பிரகாசிப்பீர்கள் என்று பிரதமர் மோடி வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டியுள்ளார்.
முடிந்தவரை விளையாட்டு போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
.