மதுரை மாநகர காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பழிக்குப்பழி கொலை செய்யும் திட்டத்துடனும், வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நோக்கத்தோடு கையில் கத்தி, வாள்களுடன், சுற்றித்திரிந்த மதுரையை சேர்ந்த கார்த்திக், ரகுமான்கான், தினேஷ்வரன், ராம்குமார், மகாராஜன், ராஜ்குமார், கரண் ஆகி்ய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பழிக்குபழியாக கொலை செய்வதற்காக, மது அருந்த, முந்தைய வழக்குகளிற்க்கு செலவிற்காக பண பறிப்பில் ஈடுபட திட்டமிட்ட நிலையில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைந்துள்ளனர்.
மதுரை மாநகர காவல் ஆணையர் எல்கைக்கு உட்பட்ட ஜெய்ஹிந்த்புரம், திடீர்நகர், சுப்பிரமணியபுரம், எஸ்.எஸ்.காலனி செல்லூர் ஆகிய காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் அனைவருமே குற்றப்பிண்ணனியில் உள்ளவர்களின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து காணப்படும் சூழலில் கையில் வாளுடன் சுற்றித்திரியும் நபர்கள் பொதுமக்கள் பொதுவெளிகளில் நடமாட அச்சப்படுகின்றனர். இதுகுறித்து காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொண்டாலும், இனி இதுபோன்று நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
LIVE 24 X 7









