தமிழ்நாடு

ஓடிடி, வெப் சீரிஸ் உள்ளிட்ட தளங்களால் வாய்ப்புகள் அதிகரிக்கிறது - நடிகை மிருணாளினி

திரையுலகை சேர்ந்த பெண்களுக்கு ஆண்களின் இடையூறு ஏற்படாமல் தவிர்க்க, தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ளும் வகையில் செயல்பட வேண்டும் எனவும் அதுவே தன் அனுபவம் என்று நடிகை மிருணாளினி கருத்து தெரிவித்துள்ளார்.

ஓடிடி, வெப் சீரிஸ் உள்ளிட்ட தளங்களால் வாய்ப்புகள் அதிகரிக்கிறது - நடிகை மிருணாளினி
நடிகை மிருணாளினி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அமைந்துள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் 132 வது ஆண்டு விழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற முதல் நாள் விழாவில்  பிரபல நடிகை மிருணாளினி ரவி கலந்து கொண்டார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், நிதி சுதந்திரம் உள்ளிட்ட தேவைக்காக திரையுலகிற்கு வரவிரும்பும் இளம்பெண்கள்  முதலில்  கல்விக்கு முக்கியத்துவம் அளித்து நன்றாக படிக்க வேண்டும் எனவும், பின்னர் திரையுலகிற்கு வந்தால் சிறப்பாக இருக்கும் எனவும் கூறினார்.  திரைப்படங்கள் வெளியான உடன் இணையதளங்களில்  வெளியிடப்படுவதால் திரைக்கலைஞர்களுக்கு பாதிப்பில்லை எனவும் ஓடிடி, வெப் சீரிஸ் உள்ளிட்ட தளங்களால் தங்களுக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக கூறினார்.

படித்த பெண்கள் திரை துறைக்கு வரும்போது பொறுமையாக முடிவெடுத்து தங்களுக்கான பாதுகாப்பை தாங்களே கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் மட்டுமல்லாமல் எந்த துறையிலும் பெண்களுக்கு இடையூறு காணப்படும் நிலையில், பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் செய்லபட வேண்டும் எனவும் அவ்வாறு,  தன்னை  தானே தற்காத்துக் கொண்டு பிறரது இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். அடுத்து தெலங்கு திரைப்படத்திற்கான வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் தெரிவித்தார்.