இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாறு பாட புத்தகத்தில் இடம் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்
சென்னை கலைவாணர் அரங்கில் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழா என்று கொண்டாடப்பட்டது இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர்,
நல்லகண்ணு ஐயாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் பெருமைக்கொள்கிறேன். விடுதலை 2 படத்தில் நடித்தது நல்லக்கண்ணு ஐயாவை பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருந்தது.
விடுதலை 2 படத்தில் மஞ்சு வாரியர் சொல்லக்கூடிய வசனங்களைப் போல தோளில் துண்டு போடுவதும், காலில் செருப்பு அணிவதும், தீபாவளி பொங்கலுக்கு போனஸ் வாங்குவதும், 8 மணி நேர வேலை நேரமாக இருப்பதும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாக இருப்பதும், நல்லகண்ணு மாதிரி பல தோழர்கள் போராடி ரத்தம் சிந்தி, உயிர் இழந்து வாங்கி கொடுத்தது என்று எத்தனை பேருக்கு தெரியும் என்று குறிப்பிட்ட அவர்
இது பற்றி தெரியாத பல பேர்களில் நானும் ஒருவன் அதில் பலனடைந்த பல பேர்களில் நானும் ஒருவன் என கூறினார்.
தோழர் நல்லகண்ணு பற்றி தெரிந்து கொள்வது மகிழ்ச்சி என குறிப்பிட்ட அவர், நல்லகண்ணு அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று பாடப் புத்தகத்தில் இடம் பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் சேதுபதி கேட்டுக்கொண்டார்