சென்னை அடுத்த வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் லயன் சபாரிக்காகக் காட்டுப் பகுதிக்குள் விடப்பட்ட ஆண் சிங்கம் ஒன்று மாயமானதால் இரண்டு நாட்களாகப் பரபரப்பு நிலவியது. எனினும், தேடுதல் வேட்டைக்குப் பிறகு அந்தச் சிங்கம் பூங்காவுக்குள்ளேயே இருப்பதை அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் நடந்தது என்ன?
தெற்காசியாவின் மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றான வண்டலூர் பூங்காவில், மக்களைக் காட்டுக்குள் வாகனத்தில் அழைத்துச் சென்று சிங்கங்களை நேரடியாகப் பார்க்க அனுமதிக்கும் லயன் சபாரி வசதி உள்ளது. லயன் சபாரியில் மொத்தம் ஆறு சிங்கங்கள் உள்ள நிலையில், சுழற்சி முறையில் இரண்டு சிங்கங்கள் மட்டுமே காட்டுக்குள் விடப்படுவது வழக்கம்.
நேற்று முன்தினம் (அக். 3) புதிதாகக் கொண்டுவரப்பட்ட ஒரு ஆண் சிங்கம் லயன் சபாரிக்காகக் காட்டுப் பகுதிக்குள் விடப்பட்டது. பொதுவாகக் காட்டிற்குள் விடப்படும் சிங்கங்கள் தாமாகவே இரவு நேரத்தில் கூண்டிற்குள் வந்துவிடுமாம். ஆனால், புதிதாக வந்த இந்தச் சிங்கம் மட்டும் இரவு நேரம் ஆன பின்னரும் கூண்டிற்குள் வராமல் இருந்துள்ளது.
இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டை
சிங்கம் மாயமான தகவல் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாகப் பூங்கா ஊழியர்களும் வனத்துறை அதிகாரிகளும் இணைந்து சிங்கத்தைத் தேடி வந்தனர். தற்போது கிடைத்த தகவலின்படி, மாயமான சிங்கத்தின் இருப்பிடத்தை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சிங்கம் லயன் சபாரி பகுதிக்கு உள்ளேதான் இருப்பதாகவும், வெளியே எங்கும் செல்லவில்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விரைவில் அந்தச் சிங்கத்தைக் கண்டுபிடித்துக் கூண்டில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். சிங்கம் மாயமானதால், நேற்றைய தினம் (அக். 4) லயன் சபாரி சேவை நிறுத்தப்பட்டது. இதனால், வண்டலூர் பூங்காவிற்கு வந்த மக்கள் சபாரி பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.