K U M U D A M   N E W S

புதிதாக விடப்பட்ட ஆண் சிங்கம் கூண்டுக்குள் திரும்பாததால் தேடல்; அதிகாரிகள் உறுதிப்படுத்திய தகவல்!

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், லயன் சபாரிக்காக விடப்பட்ட புதிய ஆண் சிங்கம் ஒன்று 2 நாட்களாக மாயமானது. பூங்கா ஊழியர்களின் தேடுதலுக்குப் பின், அந்தச் சிங்கம் லயன் சபாரி பகுதிக்கு உள்ளேயே இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் லயன் சபாரி சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.