ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி மற்றும் பெருந்துறை பகுதிகளில் உள்ள கொப்பரை கொள்முதல் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த நான்கு நாட்களாகத் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூந்துறை அடுத்த மின்னக்கட்டு வலசு பகுதியில் உள்ள தட்சிணாமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான கொப்பரை கொள்முதல் நிலையத்தில், கோவையிலிருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதே போன்று, மொடக்குறிச்சியில் மெய்யழகன் என்பவருக்குச் சொந்தமான `மேரிகோ லிமிடெட்` என்ற நிறுவனம் மற்றும் பெருந்துறை சிப்காட்டில் உள்ள அதே நிறுவனம் என மொத்தம் மூன்று இடங்களில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தக் கொப்பரை கொள்முதல் நிறுவனங்கள் இந்தியா முழுவதும் கிளைகளைக் கொண்டிருப்பதால், இந்தச் சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. சோதனை நடைபெறும் நிறுவனங்களுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனைக்குப் பிறகுதான் வரி ஏய்ப்பு முறைகேடுகள் குறித்த ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்பது குறித்த முழு விவரமும் தெரிவிக்கப்படும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.