தமிழ்நாடு

உதகை, கோத்தகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை...விடுதிகளில் முடங்கிய சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள் இந்த திடீர் கனமழையால் வெளியே வர முடியாமல் தங்கும் விடுதியில் முடங்கினர்.

உதகை, கோத்தகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை...விடுதிகளில் முடங்கிய சுற்றுலாப் பயணிகள்
உதகை, கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை
கனமழை வெளுத்து வாங்கியது

உதகை, கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.சென்னை வானிலை ஆய்வு மையம் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இருந்த நிலையில், உதகை மற்றும் கோத்தகிரியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியது.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்தது. பிற்பகலுக்கு மேல் உதகை நகர் பகுதி மற்றும் குந்த,பிங்கர் போஸ்ட், முத்தூரைப் பாலா போன்ற பகுதிகளிலும் அதை போல் கோத்தகிரி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அரவேனு, கட்டபெட்டு, ஒரசோலை, டானிங்டன், ராம்சந்த போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.

விடுதிகளில் முடங்கிய சுற்றுலாப்பயணிகள்

மேலும், மாவட்டத்திலுள்ள சுற்றுலாப் பயணிகள் இந்த திடீர் கனமழையால் வெளியே வர முடியாமல் தங்கும் விடுதியில் முடங்கி உள்ளனர். கோத்தகிரி உதகை சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.