சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்திலிருந்தே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கத்தின் மதிப்பு, தற்போது மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது.
சவரன் ரூ. 1.07 லட்சத்தைக் கடந்தது
நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ. 400 உயர்ந்திருந்த நிலையில், இன்று (ஜனவரி 19) தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 1,07,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் கணக்கில் பார்த்தால், ரூ. 170 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,450-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கடும் உயர்வு
தங்கத்தைப் பின்பற்றி வெள்ளி விலையும் இன்று விண்ணைத் தொட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி இன்று ஒரே நாளில் ரூ. 8,000 உயர்ந்து, ரூ. 3,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 8 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 318-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LIVE 24 X 7