சென்னையில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை, இன்று சற்று குறைந்து நகைப்பிரியர்களுக்குச் ஆறுதலை அளித்துள்ளது.
இன்றைய தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று அதன் வேகம் சற்றே தணிந்துள்ளது. சுப நிகழ்ச்சிகளுக்காகத் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்து வந்த விலையேற்றம், இன்று சரிவைக் கண்டுள்ளது.
அதன்படி, இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ரூ. 13,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாக, சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்தது
தங்கத்தின் விலைக்குப் போட்டியாக விண்ணைத் தொட்டு வந்த வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 4 ரூபாய் குறைந்து, 306 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 3 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக நீடித்து வந்த விலை உயர்வு இன்று சற்று குறைந்திருப்பது, நகை வாங்கக் காத்திருப்போருக்குச் சற்று நிம்மதியைத் தந்துள்ள போதிலும், தங்கம் இன்னும் ஒரு லட்சத்து ஐந்து ஆயிரம் ரூபாய்க்கு மேல் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

LIVE 24 X 7