அமைச்சர் பங்கேற்கும் விழா
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தென்காசி மாவட்டத்திற்கு இன்னும் சில நாட்களில் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விழாவினை நடத்துவதற்காக சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனை ஊழியர்களிடம் வசூல் வேட்டையை தொடங்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒவ்வொரு சுகாதார நிலையத்திற்கும் தலா ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனவும், அந்த தொகையை அந்த சுகாதார நிலையத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கொடுக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
வசூல் வேட்டை
இது தொடர்பான ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில், ஒரு அரசு விழா நடைபெற்றால் அந்த அரசு விழா நடப்பதற்கான முழு செலவையும் அரசு நிதியிலிருந்து கொடுப்பது வழக்கம்.
பிறகு ஏன் மருத்துவமனை ஊழியர்களிடம் வசூல் செய்து அரசு விழாவை நடத்த வேண்டும் எனவும் தற்போது கேள்வி எழுந்துள்ள நிலையில், இது போன்ற பல்வேறு முறைகேடுகள் சுகாதாரத்துறையில் அரங்கேறி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆடியோ விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழ்நாடு
அமைச்சர் பங்கேற்கும் விழாவிற்காக வசூல் வேட்டை...சுகாதாரத்துறை அதிகாரிகளின் செயலால் அதிர்ச்சி
ஆடியோ விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.