தமிழ்நாடு

CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி நடைமுறைக்கு விலக்கு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை விலக்கப்பட்டு, 30 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தால் ஃபெயிலாக்கும் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.

CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி நடைமுறைக்கு விலக்கு!
புதிய கல்விக்கொள்கை 2020-ன் படி 8 ஆம் வகுப்பு வரை அமலில் இருந்த கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை ஃபெயிலாக்கும் முறை சிபிஎஸ்இ பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறை மே 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9 ஆம் வகுப்பு வரையிலான விடைத்தாள்கள் திருத்தப்பட்டுவிட்டதால், இந்த நடைமுறை அடுத்த ஆண்டில் இருந்தே நடைமுறைக்கு வரும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், தங்களின் குழந்தைகள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் ஆக்க சம்மதிப்பதாக பெற்றோர்களிடம் சிபிஎஸ்இ பள்ளிகள் ஒப்புதல் கடிதம் பெற்று வருகின்றன.

சிபிஎஸ்இ பள்ளிகளில் அமலுக்கு வந்துள்ள புதிய நடைமுறை, மாணவர்கள் இடைநிற்றலுக்கு வழிவகுக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிபிஎஸ்இ-யில் நோ ஆல் பாஸ் தொடர்பாக கையெழுத்து கேட்டால் மாணவர்களின் பெற்றோர் கேள்வி கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஆனால், அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும், ஏப்ரல் மாதம் முடிவதற்கு முன்பே 9 ஆம் வகுப்பு வரை விடைத்தாள் திருத்தப்பட்டு, மாணவர்கள் பழைய விதிமுறை அடுத்த வகுப்புக்கு சென்று விட்டதாகவும், தற்போது மே ஒன்றாம் தேதி நடைமுறைக்கு வந்துள்ளதால் அடுத்த ஆண்டு மட்டுமே இது முழுமையாக நடைமுறைக்கு வருமென ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.