தமிழ்நாடு

ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி  ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு..! 

சென்னை ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி  ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி  ஒப்பந்த ஊழியர் உயிரிழப்பு..! 

சென்னை ஐசிஎப் ரயில்வே தொழிற்சாலையில் மின்சாரம் தாக்கி  ஒப்பந்த ஊழியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பெரம்பூர் ஐசிஎப் ரயில்வே பெட்டி தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். இதில் ஒப்பந்த ஊழியர்களாக சுமார் 200க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் ஐசிஎப் ரயில்வே பெட்டிகள் தயாரிப்பு கூடத்தில் பல்லாவரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.  இன்று அவர் வழக்கம் போல் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். 

அப்போது உயர் அழுத்த மின்கம்பம் செல்லும் பாதையில் தனது பணியினை மேற்கொண்டு இருந்த பரமேஸ்வரன், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி அதே இடத்தில துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

எலக்ட்ரிக் ராடுகளை கனெக்ட் செய்யும் வெல்டிங் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், அதிலிருந்து மின்சார கசிவானது பரமேஸ்வரன் பணியாற்றி கொண்டிருந்த அந்த இரும்பு கம்பியின் வழியாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததாக விசாரணையில் கூறப்படுகிறது. இதனையடுத்து உடனடியாக மின்சார இணைப்பானது துண்டிக்கப்பட்டு உயிரிழந்த பரமேஸ்வரனின் உடல் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல், கொண்டு செல்லப்பட்டது.

உடல் கருகிய நிலையில் காணப்பட்ட பரமேஸ்வரன் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே பரமேஸ்வரனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மின்சார விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சென்னை பெரம்பூர் ஐசிஎப் ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.