தமிழ்நாடு

கல்லூரி மாணவியை பாதியில் இறக்கிவிட்ட நடத்துநர்....கண்ணீருடன் மாணவி காத்திருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி

கல்லூரி மாணவியை பாதியில் இறக்கி விட்டதை தட்டிக்கேட்ட உறவினர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடத்துநர்

கல்லூரி மாணவியை பாதியில் இறக்கிவிட்ட நடத்துநர்....கண்ணீருடன் மாணவி காத்திருந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி
மாணவியை பாதியில் இறங்கிவிட்டதாக கூறப்படும் நடத்துநரிடம் உறவினர்கள் வாக்குவாதம்
மாணவியை இறக்கிவிட்ட நடத்துநர்

திருப்பூர் மாவட்டம், பட்டுத்துறையை சேர்ந்த கல்லூரி மாணவி திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். மாணவி தினமும் பட்டுத்துறையில் இருந்து ஒட்டன்சத்திரம் வந்து ஒட்டன்சத்திரத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இவர் நேற்று கல்லூரி முடிந்து மதியம் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனது சொந்த ஊரான பட்டுத்துறைக்கு செல்வதற்காக சிதம்பரத்தில் இருந்து பழனி செல்லும் அரசு பேருந்தில் ஏறி உள்ளார். அப்பொழுது நடத்துநர் ஒட்டன்சத்திரத்தில் பேருந்து நிக்காது. அதனால் நீ பேருந்தில் ஏறாதே என்று மாணவியுடன் கண்டக்டர் வாக்குவாதம் செய்து பேருந்தை விட்டு இறக்கி விட்டுள்ளார். கல்லூரி சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் மாணவியை தொடர்பு கொண்ட பெற்றோர் விவரம் கேட்டுள்ளனர்.

உறவினர்களிடம் வாக்குவாதம்

இதனையடுத்து பெற்றோரிடம் மாணவி நடந்த விபரங்களை சொல்லியுள்ளார். இதனை கேட்டு அறிந்த மாணவியின் பெற்றோர் தனது மகளை அழைத்துச் செல்வதற்காக ஒட்டன்சத்திரத்திற்கு காரில் வந்துள்ளனர்.இந்நிலையில் நேற்று மாலை சுமார் ஆறு மணி அளவில் பழனியில் இருந்து திரும்பி அந்த சிதம்பரம் பேருந்து ஒட்டன்சத்திரம் வந்துள்ளது.

மாணவியின் பெற்றோர் பேருந்தில் உள்ள நடத்துநரிடம் கேட்டபொழுது பேருந்து சிதம்பரம், திண்டுக்கல், பழனி மட்டும் தான் செல்லும் அதனால்தான் பேருந்தில் ஏற வேண்டாம் என கூறினேன் என்று கூறி ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் மாணவியின் உறவினர்களிடமும் தகராறு செய்துள்ளார். இதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்பொழுது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.