தமிழ்நாடு

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை அடித்துக்கொலை...நாடகமாடிய தாய் கைது

திசையன்விளை அருகே மகாதேவன் குளத்தில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த 2 1/2 வயது குழந்தை அடித்துக்கொலை

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தை அடித்துக்கொலை...நாடகமாடிய தாய் கைது
குழந்தையை அடித்துக்கொன்றதாக தாய் கைது
குழந்தை அடித்துக்கொலை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே மகாதேவன்குளத்தில் வசித்து வருபவர் பிருந்தா. இவரது கணவர் சரத் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை பிருந்தா தனது 2 1/2 வயது குழந்தை இறந்துவிட்டதாக நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாயிடம் தெரிவித்துள்ளார். தாய் எப்படி இறந்தது என கேட்க கட்டிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக தெரிவித்துள்ளார்.

சந்தேகம் அடைந்த பிருந்தாவின் தாய், பிருந்தா மட்டும் அவரது குழந்தை தர்ஷினியை அழைத்துக்கொண்டு திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் சுகாதார நிலையத்திற்கு வந்து குழந்தையின் தாய் பிருந்தாவிடம் குழந்தை இறப்பு குறித்து துருவி, துருவி விசாரணை செய்ததில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த லிங்கம், முத்து ஆகிய நபர்கள் குழந்தையின் தாய் பிருந்தாவை அழைத்துக் கொண்டு தனிமையில் இருப்பதற்காக வெளியில் சென்றதாக கூறப்படுகிறது.

தாய் கைது

பின்னர் அவர்களது தகாத உறவுக்கு குழந்தை இடையூறாக இருந்ததால் குழந்தையை தூங்க வைப்பதாக கொண்டு சென்று மர்மமான முறையில் இறந்த நிலையில் குழந்தையை தாயிடம் ஒப்படைத்ததாகவும், அதன் பின்னர் தாய் பிருந்தா குழந்தையை நடுவக்குறிச்சியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கொண்டு சென்று கட்டிலில் இருந்து கீழே விழுந்து நாடகமாடியதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாய் பிருந்தாவை கைது செய்தனர். தலைமறைவான லிங்கம் மற்றும் முத்து ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட குழந்தையின் உதடுகளில் காயங்கள் இருந்ததால் குழந்தை பாலியல் தொல்லைக்கு ஆளாகி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரபடுத்தி உள்ளனர்.