தமிழ்நாடு

திருவிழாவில் சீறி பாய்ந்த காளைகள்...மாடு முட்டியதில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்

இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 திருவிழாவில் சீறி பாய்ந்த காளைகள்...மாடு முட்டியதில் இளைஞருக்கு நேர்ந்த சோகம்
மாடு முட்டி உயிரிழந்த இளைஞர்
காளை விடும் திருவிழா

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அடுத்த அனங்காநல்லூர் அ.மோட்டூர் கிராமத்தில் 20ஆம் ஆண்டு காளை விடும் திருவிழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.முன்னதாக இக்கிராமத்தில் எருதுவிடும் சாலைகளில் மண் கொட்டி மண் சாலையாக வடிவமைக்கப்பட்டது. அரசு வழிக்காட்டுதல்படி, போட்டியில் கலந்துகொள்ளும் அனைத்து காளை மாடுகளுக்கும் கால்நடை மருத்துவர்கள் குழு மருத்துவ பரிசோதனை செய்த பின்பே மாடுகள் மஞ்சுவிரட்டில் அனுமதித்தனர்.

ஒரு எருது ஒரு சுற்று விடப்பட்டது.இதில் அதிவேகமாக ஓடும் காளை மாடு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.இதில் முதல் பரிசாக 75 ஆயிரமும், 2வது பரிசாக 60ஆயிரமும், 3வது பரிசுராக 50ஆயிரமாக மொத்தம் 55 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எருது விடும் திருவிழாவில் வேலூர் பேரணாம்பட்டு, கே.வி. குப்பம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.

இளைஞர் உயிரிழப்பு

மேலும் காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மாடு விடும் திருவிழாவை காண வந்த அகரம் பகுதியை சேர்ந்த பரந்தாமன் (28) என்ற கூலி தொழிலாளியை மாடு முட்டியதில் படுகாயம் அடைந்தார்.இதனையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாடு விடும் திருவிழாவில் மாடு முட்டியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.