பிரபல திரைப்பட காமெடி நடிகர் யோகிபாபு கோவை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
யோகி பாபு சாமி தரிசனம்
சுவாமி தரிசனத்திற்காக அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். பாலக்காட்டில் ஜெயிலர்-2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் நடித்து வரும் யோகி பாபு இன்று மாலை மருதமலைக்கு வந்து மனம் உருகி முருகனை தரிசனம் செய்தார்.
அப்போது சொந்தமாக தயாரிக்க இருக்கும் படத்தின் கதையை முருகன் பாதத்தில் வைத்து பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார். யோகிபாபு கோவிலுக்கு வருகை தந்தபோது, அவரைப் பார்த்த பக்தர்கள் உற்சாகமடைந்தனர். அவரிடம் கை குலுக்கியும், புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தனர்.
பக்தர்களுடன் செல்ஃபி
யோகிபாபு எளிமையாகவும், இயல்பாகவும் பக்தர்களுடன் கலந்துரையாடினார். கோவிலில் தரிசனம் முடிந்த பின், அவரிடம் பிரசாதம் வழங்கப்பட்டது. அவரும் பக்தர்களிடம் பிரசாதத்தை வழங்கினார். சுவாமி தரிசனம் செய்தபோது, அவருக்கு மருதமலை முருகனின் படம் வழங்கப்பட்டது.
யோகிபாபு மிக எளிமையான செயல், பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், அவரது வருகை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மேலும், பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.