புலம்பெயர்ந்து பிகாரிலிருந்து வந்த 65 லட்சம் வாக்காளர்களுக்குத் தமிழகத்தில் வாக்குரிமை வழங்குவது சட்டவிரோதமானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
வாக்காளர் உரிமைமீதான அச்சுறுத்தல்:
பீகாரில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் உரிமையை இழக்கும் சூழலில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை வாக்காளர்களாகச் சேர்ப்பது ஆபத்தானது மற்றும் சட்டவிரோதமானது என்று அவர் குறிப்பிடுகிறார். இது தமிழக வாக்காளர்களின் உரிமைகளில் தலையிடுவதற்குச் சமம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை:
புலம்பெயர்ந்த தொழிலாளர்களை 'நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்' என்று அழைப்பது, அவர்களை அவமதிக்கும் செயல் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். பெரும்பாலான தொழிலாளர்கள் தற்காலிகமாக மட்டுமே புலம்பெயர்ந்துள்ளதால், அவர்களின் சொந்த மாநிலத்திலேயே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் அதிகார துஷ்பிரயோகம்:
தேர்தல் ஆணையம் தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி மாநிலங்களின் தேர்தல் முறைகளை மாற்ற முயற்சிக்கிறது என்று ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அதிகார துஷ்பிரயோகத்தை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.