தமிழ்நாடு

துணி துவைக்கச் சென்றபோது நேர்ந்த சோகம்.. காப்பாற்ற போன பெண்ணும் பலி

மேட்டூர் அருகே துணி துவைக்கச் சென்றபோது, இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கியதை அடுத்து, காப்பாற்ற சென்ற இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

துணி துவைக்கச் சென்றபோது நேர்ந்த சோகம்.. காப்பாற்ற போன பெண்ணும் பலி
துணி துவைக்கச் சென்றபோது இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேர் பலி

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த நங்கவள்ளி அருகே வீரக்கல் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சிவலிங்கம் இவருடைய மகள் சிவ நந்தினி (18), மகன் சிவா ஸ்ரீ (10). அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகள் திவ்யதர்ஷினி (14).

இவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள காவிரி சரபங்க உபரி நீர் திட்டத்தில் இணைக்கப்பட்ட கொத்தி குட்டை ஏரிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை [20-10-24] அன்று காலை துணி துவைக்க சென்றனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு சென்ற சிவா ஸ்ரீ மற்றும் திவ்யதர்ஷினி இரண்டு பேருக்கும் நீச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்கு சென்று ஏரி நீரில் மூழ்கினர்.

இதனை கண்ட சிவநந்தினி இருவரையும் காப்பாற்ற ஏரியில் இறங்கி முயற்சி செய்தபோது அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நீரில் மூழ்கியதை கண்ட அக்கம் பக்கத்தினர் 3 சிறுவர்களை காப்பாற்ற ஏரியில் இறங்கி காப்பாற்ற முற்பட்ட போதும் சிறுவர்களை மீட்க முடியாமல் நீண்ட நேரம் தேடி மூன்று பேரின் சடலத்தை ஏரியில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நங்கவள்ளி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து 3 சிறுவர்கள் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.