சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாக கட்டிடங்களின் குத்தகை காலத்தை 12 வருடங்களாக அதிகரித்தும், மாத வாடகையை குறித்த நேரத்தில் செலுத்த தவறும் பட்சத்தில் 12% தனிவட்டி செலுத்திடவும் மற்றும் ஒவ்வொரு வருடமும் 5% வாடகையை உயர்த்தவும் மாமன் றகூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 127 வணிக வளாகங்களில், 5914 கடைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக மாதத்திற்கு ரூ.180 கோடி வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குத்தகை காலம் 9 ஆண்டுகள் என்பதை உரிய விதிகளின்படி 12 மாதங்களாக நீட்டிக்க வேண்டும். வணிக வளாக கடைகளுக்கான மாத வாடகை ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் 12% அபராதத்துடன் செலுத்த வேண்டும்.
அனைத்து வணிக வளாக கடைகளின் வாடகையையும் ஒவ்வொரு வருடமும் 15% உயர்த்தப்பட் டடநிலையில், 5% ஆக குறைக்கவும் மாமன் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் சிறப்பு திட்டங்கள் துறை சார்பில் அண்ணாநகர் பகுதியில் உள்ள தெருக்களில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு மாமன்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகரில் On Street வாகன நிறத்த செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக வாகன நிறுத்த மேலாண்மை திட்டம் நடவடிக்கைகளை 2017 முதல் பெருநகர சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
அதன் மூலம் தெருக்களில் பார்க்கிங் திட்டம் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் பார்க்கிங் என்பது உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேகமாக வளர்ந்து வரும் சீர்மிகு நகரங்களுக்கான தீர்வுகளில் ஒன்றாக உள்ளது.
விமான நிலையம், பல்கலைக்கழகங்கள், வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் தானியங்கு வாகன நிறுத்த மேலாண்மை திட்ட தொழில்நுட்பம் மூலம் குறிப்பிடத்தக்க நன்மைகளை உணரத் தொடங்கி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திடமிருந்து (CUMTA) பார்க்கிங் கொள்கை இறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வாகன நிறுத்தம் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்காக 19 இடங்களில் சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதில் 10 இடங்களில் வாகனம் நிறுத்தங்களை நிர்வாகத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
அந்த அடிப்படையில் சென்னை அண்ணா நகர் பகுதிகளில் உள்ள முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சாலைகளில் பார்க்கிங் நிர்வாகத்தை மேற்கொள்ள முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி தெருவுக்கு வெளியே ஏற்படுத்தப்பட உள்ள வாகன நிறுத்தங்களில் ஒரு மணி நேரத்திற்கு இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ.10, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20 வசூலிக்க அனுமதி.
அதேபோல, ஒரு மணி நேரத்திற்கு மேல் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 40, இலகு ரக மற்றும் கனரக சரக்கு வாகனங்களுக்கு ரூ. 60 கட்டணம் வசூலித்துக் கொள்வதற்கு மாமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், மாநகராட்சி ஆணையரால் பார்க்கிங் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்குரிய கட்டணத்தை வாகன உரிமையாளர்களிடம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் வாகனம் நிறுத்தம் திட்டத்திற்கு தேவையான அனுமதிகளை பெருநகர சென்னை காவல்துறையிடம் இருந்து அபராதம் மற்றும் விதிமீறல் கட்டணங்களை பெறுவதற்கும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்திற்கு அங்கீகாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









