பிளஸ் 2 தேர்வில் அசத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூர் பகுதியை சேர்ந்தவர் மாணவன் கீர்த்தி வர்மா. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். சிறுவயதிலேயே மின்சாரம் தாக்கி இரண்டு கைகளையும் இழந்த மாணவன் கீர்த்தி வர்மா படிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார். மேலும் படங்கள் வரைவதிலும் இவர் கைதேர்ந்தவராக இருந்தார்.
இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவன் கீர்த்தி வர்மா 437 மதிப்பெண் பெற்று தான் படித்த பள்ளியிலேயே முதல் மாணவனாக வந்தார்.
முதல்வருக்கு கோரிக்கை
இவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தரப்பினர் பாராட்டினர். இந்நிலையில் இந்த வருடம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய கீர்த்தி வர்மா 471 மதிப்பெண் பெற்றுள்ளார்.ஆசிரியர்களின் துணையோடு தேர்வு எழுதிய மாணவன் 471 மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார். இவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய மாணவன் கீர்த்தி வர்மா, அடுத்ததாக பி.இ படிக்க ஆசைப்படுவதாகவும், அதற்கு அரசு தனக்கு உதவி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு கைகளை இழந்த தனக்கு, கைகளை பொருத்த தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும் எனவும், தாயின் அரவணைப்பில் வாழும் தனக்கு அரசு முன்வந்து உதவி செய்ய வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.