விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணி 201 ரன்களுக்கு ஆல் அவுட்!
IND vs SA
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ்

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முத்துசாமி 109 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவடைந்தது.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் சரிவு

நேற்று (நவ.24) மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் (58 ரன்கள்) மற்றும் ராகுல் (22 ரன்கள்) ஜோடி 65 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு வந்த சாய் சுதர்சன் (15 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்தார். நிலையாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களில் ஆட்டமிழந்தபின், இந்திய அணியின் மிடில் வரிசை மளமளவென சரிந்தது.

பண்ட் (7 ரன்கள்), ஜடேஜா (6 ரன்கள்), துருவ் ஜூரெல் (டக் அவுட்), நிதிஷ் ரெட்டி (10 ரன்கள்) என முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஏமாற்றமளித்தனர். இந்த 4 விக்கெட்டுகளையும் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன் கைப்பற்றினார்.

வாஷிங்டன் சுந்தரின் போராட்டம்

122 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் ஜோடி சேர்ந்து மீட்டெடுக்கப் போராடியது. இந்த ஜோடி 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் 19 ரன்கள் எடுத்த நிலையில், இந்திய அணி 83.5 ஓவர்களில் 201 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மார்கோ ஜான்சன் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

தென் ஆப்பிரிக்காவின் முடிவு

முதல் இன்னிங்ஸில் 288 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணிக்கு ஃபாலோ-ஆன் வழங்காமல், இரண்டாவது இன்னிங்ஸில் தானே பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.