2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்புடன் சூர்யகுமார் யாதவிற்கு கொல்கத்தா அணி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Suryakumar Yadav Captain in IPL Series 2025 : ஐபிஎல்லில் இதுவரை 3 முறை கோப்பையை கொல்கத்தா அணி வென்றுள்ளது. இந்த அணி இந்திய அணிக்கு பல சிறந்த வீரர்களை அளித்துள்ளது. கேகேஆர் அணியில் இருந்து தான் ரிங்கு சிங், கில் போன்ற பேட்ஸ்மேன்களும், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களையும் உருவாக்கி உள்ளது. 2024ம் ஆண்டின் ஐபிஎல்-லில் கூட கோப்பையை வென்று, தன்னுடைய அணியின் பலத்தை தக்கவைத்தது கேகேஆர்.
இந்த அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும், கம்பீரும் தான் தலைமை தாங்கி வந்தனர். இந்நிலையில், கேகேஆர் அணியின் கேப்டனை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. என்னதான் சென்ற ஐபிஎல்-ல் கேகேஆர் அணி கோப்பையை தட்டித்தூக்கியிருந்தாலும்,
அதன் கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா மாற்ற நினைப்பதற்கான காரணம் சமீபத்தில் அவர் இருக்கும் பார்ம் தான் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 2023 ஒருநாள் உலக கோப்பையில் கடைசியாக சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய ஸ்ரேயாஸ் அதன் பிறகு வந்த ஐபிஎல் 2024, இங்கிலாந்து டெஸ்ட் தொடர், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றில் சொல்லத்தக்க வகையில் ரன்கள் குவிக்கவில்லை.
இதனால், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஸ்டார் வீரரான சூர்ய குமார் யாதவை கேகேஆர் அணிக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒருபுறம் ஸ்ரேயாசுக்கு இந்த நிலை இருக்க, மறுபுறம், மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ்விற்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
மும்பை அணியின் பில்லராக பார்க்கப்பட்டவர் ரோகித் சர்மா. ஆனால ஐபிஎல் 2024ல் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து இறக்கி ஹர்திக்கை கேப்டனாக நியமித்தது மும்பை அணி. இது பலருக்கு பிடிக்கவில்லை என்றால் மிகையாகாது. இந்த சூழலுக்கு ஏற்ற மாதிரி, கடந்த சீசனில் மோசமாக விளையாடியது மும்மை அணி. இதனால் தற்போது ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளார். அதே போல மும்பை அணிக்கு தான் கேப்டனாக இருக்க வேண்டும் என சூர்யா கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் இவருக்கு மும்பை நிர்வாகம் உரிய மரியாதையை அளிக்கவில்லை என்பதால் இந்த முறை தனக்கான ஒப்பந்தத்தை மும்பை அணி நிர்வாகத்திடன் தெளிவாக கூறியுள்ளாராம்.
மேலும் படிக்க: ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருக்கலாம்... விசிக பிரமுகர் அதிரடி கருத்து
கேப்டன்சியை சூர்யகுமார் கோரியுள்ளதாகவும், இதனை ஏற்கமுடியாததால் அவரை விடுவிக்க மும்பை நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், மும்பை அணி சூர்யகுமார் யாதவ்விற்கு பதிலாக கேகேஆர் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரை ட்ரேட் செய்யலாம் என கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கேகேஆர் அணியின் சூர்ய குமார் யாதவ் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் தெரியவந்துள்ளது.