கடந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து எதிரான தொடரை முதல்முறையாக இந்திய அணி சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் இழந்தது. இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. இதன்காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதற்கு இந்திய அணியின் முன்னணி வீரர்களான கேப்டர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் மோசமான பேட்டிங் என்ற கூறப்பட்டது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு
இதன்காரணமாக சீனியர் வீரர்களான இருவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், வீரர்கள் அறிவிக்கப்படும் முன்பே ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் 7ம் தேதி அதிரடியாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து முன்னணி வீரரான விராட் கோலியும் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை இன்ஸ்டா கிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
உருக்கமாக பதிவு
அதில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து 14 ஆண்டுகள் ஆகின்றன. உண்மையை சொன்னால், இந்த வடிவம் என்னை இவ்வளவு தூரம் அழைத்து செல்லும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்த வடிவமானது என்னை சோதித்தது, என்னை வடிவமைத்தது, வாழ்க்கை முழுவதும் முழுவதும் நான் சுமந்து செல்லுவதற்கு பாடங்களை கற்றுக்கொடுத்தது. இந்த வடிவத்தில் இருந்து நான் விலகுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் இது சரியானது என நினைக்கிறேன். ஒவ்வொரு நபருக்காகவும் நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் நான் நடந்து செல்கிறேன், நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
விராட் கோலி இந்திய அணிக்காக 123 போட்டிகளில் விளையாடி 9230 ரன்கள் அடித்துள்ளார். கடந்த டி 20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற பின்னர் டி20 கிரிக்கெட்டில்க் இருந்து விராட் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.